உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எந்தவித தவறும் கிடையாது - அமைச்சர் ரகுபதி

அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தலைவர் தலைவருக்கு அடுத்தபடியாக இளந்தலைவர். எங்களின் இயக்கத்தில் 2 கோடி தொண்டர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். அத்தனை பேரும் உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவரை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது.
சேலத்தில் 15 லட்சம் இளைஞர்களை வைத்து இளைஞர் அணி மாநாட்டை நடத்தி இருக்கிறோம். இளைஞர்கள் திமுகவில் தான் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக சேலத்தில் நடத்தப்பட்ட மாநாடு இது என்பதை மறந்து விடாதீர்கள். திமுக ஆட்சியில் தான் தமிழகம் இன்றைக்கு மருத்துவத்துறையிலே தலைநிமிர்ந்து நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






