திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு: ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்


திருவள்ளூர்  சிறுமி வன்கொடுமை வழக்கு: ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்
x

குற்றவாளியான ராஜு பிஸ்வகர்மாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்க முற்பட்டனர்.

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், 14 நாட்களுக்கு பின் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா என்பது தெரியவந்தது. விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். திருவள்ளூர் மவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜு பிஸ்வகர்மாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து இன்று குற்றவாளியை புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது குற்றவாளியான ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, போலீசார் நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்துவந்தபோது ராஜு பிஸ்வகர்மாவை அங்கிருந்த வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

1 More update

Next Story