தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.
தூத்துக்குடி: வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி அன்னலட்சுமி (வயது 50). இவர் சம்பவத்தன்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மேஜை டிராயரில் இருந்த ரூ,6,500-ஐ திருடியுள்ளார்.

அப்போது கண்விழித்து பார்த்த அவர் கூச்சலிட்டுள்ளார். சுதாரித்து கொண்ட மர்மநபர், அவரது கழுத்தில் கிடந்த 4 கிராம் தாலி சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகிறார்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com