தமிழக அரசு எனது செல்போனை ஒட்டுக்கேட்கிறது; பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேவேளை, தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நயினார் நாகேந்திரன் இன்று கோவை வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
கூட்டணியை பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து பேஸ்புக், ட்விட்டரில் பதிவு போட வேண்டாம். அது பற்றி பேச வேண்டியது அகில இந்திய தலைமை. அவர்கள் முடிவு செய்வர்.
தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை தி.மு.க, அரசு கண்காணிக்கிறது. பா.ஜ.க, தொண்டர்கள் எல்லோரும் போனில் சற்று எச்சரிக்கையாக பேசுவது நல்லது' இவ்வாறு அவர் பேசினார்.






