தேர்தலில் வெற்றிபெற, அதிமுக ஒன்றிணைய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அரசியலில் எதுவும் நடக்கலாம் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை.புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக அணிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான உண்டான அடிப்படை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






