இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 05.01.2026.

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Jan 2026 3:39 PM IST
திருச்சி: 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, விமான நிலையம் புறப்பட்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
- 5 Jan 2026 3:36 PM IST
புதுக்கோட்டை கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்காதது ஏன்? - தமிழிசை விளக்கம்
அதிமுக - பாஜக கூட்டணியே உறுதியான கூட்டணிதான். புதுக்கோட்டையில் நடந்தது என்.டி.ஏ.,வின் கூட்டம் அல்ல. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வந்தால் அது பலம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
- 5 Jan 2026 3:03 PM IST
பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல்
'இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளார்' என்று கூறப் பட்டுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- 5 Jan 2026 10:29 AM IST
தவெக மீது காதல்: நாஞ்சில் சம்பத்
தவெக உடன் கூட்டணி வைக்க எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்; காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்கிறது எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார் - தவெகவின் நாஞ்சில் சம்பத் பேட்டி
- 5 Jan 2026 9:49 AM IST
கனிமொழிக்கு அமித்ஷா வாழ்த்து
திமுக எம்பி கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி திமுக எம்பியுமான கனிமொழி இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- 5 Jan 2026 9:10 AM IST
மம்தா பானர்ஜிக்கு மோடி வாழ்த்து
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு மம்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் வேண்டுவதாக தனது வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளார்.
















