இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Jan 2026 9:18 AM IST
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 13 Jan 2026 9:16 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
இந்நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 Jan 2026 9:15 AM IST
ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தலாம்: வெள்ளை மாளிகை
ஈரானுக்கு எதிராக தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள டிரம்ப் பயப்படமாட்டார் என்று லீவிட் கூறினார்.
- 13 Jan 2026 9:12 AM IST
அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- 13 Jan 2026 9:10 AM IST
ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள்; தனது குடிமக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
அமெரிக்க குடிமக்கள், தரை வழியே அர்மீனியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
- 13 Jan 2026 9:09 AM IST
243 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: சித்தராமையா பெருமிதம்
எங்களுடைய அரசு கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என சித்தராமையா கூறினார்.
- 13 Jan 2026 9:08 AM IST
அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்
மும்பை நகரம் குறித்த அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை என ராஜ்தாக்கரேக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து உள்ளார்.
- 13 Jan 2026 9:06 AM IST
நாளை மகரஜோதி: சபரிமலையில் குவிந்த பக்தர்கள் - பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரணங்கள்
மகரவிளக்கு பூஜை நாளில் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண ஊர்வலம் பந்தளத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
- 13 Jan 2026 9:06 AM IST
நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ: நடிகர் சத்யராஜ்
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் பொதுக்கூட்டத்துடன், சமத்துவ நடைபயண நிறைவு விழா நடந்தது. விழாவில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்தார். இதில் துரை வைகோ எம்.பி. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பூமிநாதன் எம்.எல்.ஏ.. தளபதி எம்.எல்.ஏ., நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 13 Jan 2026 9:04 AM IST
டெல்லியில் விஜய் நடத்திய ஆலோசனை: தேர்தல் கூட்டணி அமைகிறதா..?
சி.பி.ஐ. விசாரணை முடிந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக சென்னை திரும்பவில்லை. அவர் சொகுசு ஓட்டலில் தங்கினார். அங்கு அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்த சட்ட ஆலோசனைகளை சட்ட நிபுணர்களிடம் பெற்றதாக தெரிகிறது.
















