தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இன்று டெல்லி பயணம்
x

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நாளை நடைபெறுகிறது.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதற்கு முந்தைய ஆண்டு, அதாவது 2024 ஆம் ஆண்டு டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் கலந்து கொண்டார்.

நாளை நடைபெறும் பொங்கல் விழாவில், தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பார்கள் எனத்தெரிகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று டெல்லி செல்ல உள்ளனர். இந்த விழாவில் மத்திய அமச்சர்கள், பாஜக தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

1 More update

Next Story