இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
தினத்தந்தி 13 July 2025 9:50 AM IST (Updated: 14 July 2025 9:00 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 13 July 2025 10:10 AM IST

    திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தம்


    திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி மைசூரு - சென்னை காவிரி ரெயில், கோவை - சென்னை சேரன் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் - சென்னை ஜோலார்பேட்டை ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    10க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

  • 13 July 2025 10:05 AM IST

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை


    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி வருகைதரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.


  • 13 July 2025 10:02 AM IST

    அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்கும் போராட்டத்திற்கு புறப்பட்டார் விஜய்


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜய், தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

  • 13 July 2025 9:56 AM IST

    சரக்கு ரெயிலில் தீ விபத்து - 8 ரெயில்கள் ரத்து


    திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே 52 வேகன்களில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.


  • 13 July 2025 9:54 AM IST

    அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம்: பங்கேற்கிறாரா விஜய்..?


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


  • 13 July 2025 9:53 AM IST

    நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்


    பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த இவர் உயிரிழந்திருக்கிறார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • 13 July 2025 9:52 AM IST

    இன்றைய ராசிபலன் - 13.07.2025

    கும்பம்

    வீட்டில் நிம்மதி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.

    அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்

1 More update

Next Story