இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025


தினத்தந்தி 16 Sept 2025 9:06 AM IST (Updated: 17 Sept 2025 8:53 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 Sept 2025 11:10 AM IST

    டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸி. அணிகளுடன் இணைந்த ஹாங்காங்


    பீல்டிங்கில் படுமோசமாக செயல்பட்ட ஹாங்காங் அணி மொத்தம் 6 கேட்சுகளை தவறவிட்டது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் ஹாங்காங்கும் இணைந்துள்ளது. இந்தியா. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு ஆட்டத்தில் 6 கேட்சுகளை தவறவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


  • 16 Sept 2025 11:09 AM IST

    நல்வாழ்வு தரும் நவராத்திரி விழா


    சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவு களில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது.


  • 16 Sept 2025 11:07 AM IST

    மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


    தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 16 Sept 2025 11:05 AM IST

    இந்த வார விசேஷங்கள்: 16-9-2025 முதல் 22-9-2025 வரை


    16-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.

    * குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.


  • 16 Sept 2025 11:04 AM IST

    உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்: தங்கம் வென்று தமிழக வீரர் வரலாற்று சாதனை


    உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 1,000 மீ ஸ்பிரிண்ட்-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


  • 16 Sept 2025 11:03 AM IST

    மதுரையில் பயங்கரம்.. கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை - பங்குதாரர் உள்பட 7 பேர் கைது


    மதுரையில் நடந்த தொழிலதிபர் கொலையில், கூலிப்படையை ஏவி கொன்ற பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.


  • 16 Sept 2025 10:33 AM IST

    டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு


    அதிகாலையிலேயே சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தபின் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவை சந்திக்கும் முன் இன்று சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி, அங்கு தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லி சென்றடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் தனபால், இன்பதுரை உள்ளிட்டோர் நேரில் வரவேற்றனர்

  • 16 Sept 2025 10:24 AM IST

    திருமணத் திட்டங்கள்...மனம் திறந்த ஜான்வி கபூர் 

    கடைசியாக ''பரம் சுந்தரி'' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர் தற்போது ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'' மற்றும் ''ஹோம்பவுண்ட்'' படங்களில் நடித்துள்ளார். இதில், 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

  • 16 Sept 2025 10:23 AM IST

    மற்ற அணிகள் உயர்ந்த மட்டத்தில் விளையாடுகின்றன.. ஆனால் நாம்.. - பாக்.முன்னாள் வீரர் வேதனை


    இப்போதைய பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு நிகராக இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

  • 16 Sept 2025 10:20 AM IST

    சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு


    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    317 பயணிகளுடன் தோகாவிலிருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு திரும்பியது.துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் சிறிது நேரம் வட்டமடித்து தாமதமாக சென்னையில் தரையிறங்கின.மொரிசியஸ், தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் செல்லும் 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

1 More update

Next Story