இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Sept 2025 10:28 AM IST
செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்
செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
- 19 Sept 2025 10:28 AM IST
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில், நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின் மோட்டார் பயன்படுத்தி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 19 Sept 2025 10:26 AM IST
தென் ஆப்பிரிக்கா, ஆஸி. இல்லை.. உலகிலேயே சிறந்த அணி அவர்கள்தான் - ஆப்கானிஸ்தான் வீரர் புகழாரம்
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் குல்பாடின் நைப் ஆசியாவிலும் உலகிலும் சிறந்த அணி இந்தியாதான் என்று புகழாரம் சூட்டினார்.
- 19 Sept 2025 10:24 AM IST
அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகள், வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
- 19 Sept 2025 10:24 AM IST
விரைவில் அறிமுகம் ஆகிறது இ ஆதார் மொபைல் செயலி- வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணலாம்
ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை ஆதார் சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் மேற்கொள்ள முடிகிறது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக இனி செயலியை அறிமுகம் செய்ய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
- 19 Sept 2025 10:23 AM IST
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி ஆச்சக்கரையை சேர்ந்தவர் மேத்தா, 71. இவர், நேற்று மாலை 5:15 மணிக்கு நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கி காயமடைந்தார். ஊட்டியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார்.
- 19 Sept 2025 10:22 AM IST
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 17 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த புதிய ஐபோன் 17 தொடர் செல்போன் விற்பனை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி ஐபோன் 17, ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
- 19 Sept 2025 10:22 AM IST
கோடீஸ்வர குடும்பங்கள் இந்தியாவில் அதிகரிப்பு
இந்தியாவில், 8.50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருண் இந்தியா' சொத்து அறிக்கை 2025ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 1.78 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Sept 2025 10:21 AM IST
இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி விதித்தது ஏன்? - டிரம்ப் விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்து சென்றிருந்தார். நேற்று முன்தினம் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் கெயிர் ஸ்டார்மருடரை நேற்று சந்தித்தார். முதலில் இருவரும் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இதில் இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
- 19 Sept 2025 10:19 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய ரூட்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
















