இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Sept 2025 12:07 PM IST
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் செல்லும் அவர் ராமநாதபுரத்திலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
- 19 Sept 2025 11:46 AM IST
'டியூட்' படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது!
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள “டியூட்” படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
- 19 Sept 2025 11:15 AM IST
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்.. எந்த தொடரில் தெரியுமா..?
'ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்' ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டில் மீண்டும் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இந்தியா, ஹாங்காங், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற முக்கிய அணிகள் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 19 Sept 2025 10:58 AM IST
தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் - தவெக தலைவர் விஜய் இரங்கல்
சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரோபோ சங்கர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 19 Sept 2025 10:56 AM IST
அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தெலுங்கானா இளைஞர்
தெலுங்கானாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர், தனது அறை நண்பருடனான சண்டையில், அமெரிக்க போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை இந்தியா கொண்டு வர, குடும்பத்தினர் வெளியுறவுத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 19 Sept 2025 10:56 AM IST
ஐமேக்ஸ் திரையில் வெளியாகும் 'காந்தாரா சாப்டர் 1' - படக்குழு அறிவிப்பு
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான 'காந்தாரா' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர் 1' என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இதில் நடிகை ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
- 19 Sept 2025 10:53 AM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Sept 2025 10:51 AM IST
சென்னை: வேலு நாச்சியார் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலுநாச்சியார் உருவச்சிலை நிறுவப்படும் என 2024-2025 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
- 19 Sept 2025 10:32 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: ஆஸி. அணியின் அதிரடி வீரர் விலகல்
டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஷ் இங்கிலிஸ் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தசை வலி காரணமாக இந்த தொடரிலிருந்து ஜோஷ் இங்கிலிஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 19 Sept 2025 10:30 AM IST
300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் - உதயநிதி ஸ்டாலின்
ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான நவீன கழிவுநீரகற்று இயந்திர வாகனத்தை துணை முதல்-அமைச்சர் கொடியசைத்து வழியனுப்பினார்.
















