இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 20-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Sept 2025 10:03 AM IST
நாகை பரப்புரைக்காக சென்னையில் இருந்து திருச்சி சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று(சனிக்கிழமை) நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் நாகை பரப்புரைக்காக சென்னையில் இருந்து தவெக தலைவர் விஜய் திருச்சி சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து தொண்டர்களின் பலத்த வரவேற்புக்கிடையே பரப்புரை நடைபெறும் இடத்திற்கு விஜய் சென்று கொண்டிருக்கிறார்.
திருச்சியில் இருந்து சுமார் 145 கிலோ மீட்டர் பயணித்து நாகையில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய உள்ளார். இன்று காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் பிரசாரத்தை துவக்குகிறார் விஜய்.
- 20 Sept 2025 9:16 AM IST
சூப்பர் 4 சுற்று: இலங்கை - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. அதன்படி சூப்பர் 4 சுற்றில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் இலங்கை வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன. சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பளும் இருக்காது.இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
- 20 Sept 2025 9:14 AM IST
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம், ரூ.56 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 30, ஏ.எச்.-64 அபாசே ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 3,250 கவச வாகனங்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 606 கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள் ஆகியவை வழங்கப்படும்.
- 20 Sept 2025 9:12 AM IST
என்னை சர்வதேச கைக்கூலி என்றெல்லாம் பேசுகிறார்கள்?- கே.பி.ஓய் பாலா வேதனை
ஏழை-எளியோருக்கு உதவிகள் செய்து வரும் பாலா குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரை வெளிநாட்டு கைக்கூலி என்றும், அவர் கொடுத்த ஆம்புலன்சுகள் உள்ளிட்ட வாகனங்கள் போலி என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட பரபரப்பானது.
- 20 Sept 2025 9:10 AM IST
"ஆடைகளை வைத்து நடிகைகளின் தரத்தை தீர்மானிக்காதீர்கள்"- வேதிகா ஆவேசம்
'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி'. 'காவிய தலைவன்'. 'காஞ்சனா-3'. 'பேட்டாராப்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. வெண்ணை கட்டி தேகம் கொண்ட வேதிகா. அவ்வப்போது தனது கலக்கல் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில் அணியும் உடைகளை வைத்து நடிகைகளின் தரத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- 20 Sept 2025 9:08 AM IST
"வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழர் வரலாறு குறித்து பூம்புகாரில் ஆழ்கடல் ஆராய்ச்சி தொடங்கியது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- 20 Sept 2025 9:06 AM IST
பரபரக்கும் அரசியல் களம்: நாகை பிரசாரத்திற்கு புறப்பட்டார் விஜய்
நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து காரைக்கால் வழியாக வரும் விஜய்க்கு மாவட்ட எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து நாகூர், நாகை கலெக்டர் அலுவலகம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் வழியாக கிழக்கு கடற்கரை சாலை சென்று அங்கிருந்து புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு சென்று விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
- 20 Sept 2025 9:05 AM IST
ராசிபலன் (20-09-2025): இல்லற வாழ்வில் இறங்க இதுவே நல்ல தருணம் - எந்த ராசிக்கு தெரியுமா..?
கடகம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். அதனை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - கருநீலம்














