இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Jan 2026 10:10 AM IST
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது குறித்து ரோகித் சர்மா அளித்த பேட்டியில், “2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான். அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்” என்று கூறினார்.
- 22 Jan 2026 10:08 AM IST
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்சயா சென் வெற்றி
இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபேயின் வாங் சு வெய்யை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- 22 Jan 2026 10:07 AM IST
சர்வதேச செஸ் போட்டி: குகேஷ்-பிரக்ஞானந்தா ஆட்டம் டிரா
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. இதில் 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் குகேஷ் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 40-வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். குகேஷ் தொடர்ச்சியாக சந்தித்த 4-வது டிரா இதுவாகும். பிரக்ஞானந்தா 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளார்.
- 22 Jan 2026 10:04 AM IST
சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம், வெள்ளி விலை: திடீர் குறைவுக்கு என்ன காரணம்..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 22 Jan 2026 10:03 AM IST
திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு அம்ரித்பாரத் ரெயில்-மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
இந்த ரெயிலில் 11 பொதுப்பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
- 22 Jan 2026 10:02 AM IST
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து
சென்னை பசுமை வழிசாலை இல்லத்தில் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்கிறார்.
- 22 Jan 2026 10:00 AM IST
மாமல்லபுரத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கும் த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார்.
- 22 Jan 2026 10:00 AM IST
இன்றைய ராசிபலன் (22.01.2026): எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாக நிகழும் நாள்..!
மகரம்
உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். அதனை முடித்து விடுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சித் தங்கும். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனம் விட்டு பேசுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்














