பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து
சென்னை பசுமை வழிசாலை இல்லத்தில் பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்கிறார்.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகளும், தொகுதிப் பங்கீடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கைகோர்த்துள்ளன.
இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நாளை (23-ம் தேதி) மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதனை முன்னிட்டு அனைத்துக் கூட்டணி தலைவர்களையும் ஒரே மேடையில் ஒன்றிணைத்து, பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளிக்கிறார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது கூட்டணியில் தொகுதி பங்கீடு உளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்று தெரிகிறது.








