இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 03-12-2025
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Dec 2025 9:42 AM IST (Updated: 4 Dec 2025 8:38 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 3 Dec 2025 1:09 PM IST

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்: நாகர்கோவில் - கோவா இடையே சிறப்பு ரெயில் 


    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாகர்கோவில் - கோவா மாநிலம் மட்கான் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

  • 3 Dec 2025 1:08 PM IST

    சிறைத்துறையின் புதிய வழிகாட்டு நெறிமுறை - மதுரை ஐகோர்ட்டு கிளை பாராட்டு 


    கைதிகளுக்கு கொடுக்கப்படும் சிறு தண்டனைகளின் விவரத்தை பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 3 Dec 2025 12:05 PM IST

    கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு

    கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதன்படி அங்குள்ள உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களிலும் குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

  • 3 Dec 2025 12:00 PM IST

    குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு

    அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதன்படி குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதி செந்தில்குமார் தள்ளுபடி செய்தார்.

    மேலும் பாடல்களை உருமாற்றம் செய்வதை தடுக்கவும், அனுமதி இன்றி பயன்படுத்துவதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உள்ளது என்றும், பிரதான வழக்கின் விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிடப்பட்டது.

  • 3 Dec 2025 11:14 AM IST

    சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு - அன்புமணி ராமதாஸ் தாக்கு 


    தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 3 Dec 2025 11:13 AM IST

    இந்தோனேசியா: வெள்ளத்திற்கு 700 பேர் பலியான நிலையில் மீண்டும் தாக்கிய நிலநடுக்கம்


    இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது.

  • 3 Dec 2025 11:11 AM IST

    நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் ஆர்ப்பாட்டம்

    தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 3 Dec 2025 11:09 AM IST

    9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு

    வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

  • 3 Dec 2025 11:07 AM IST

    வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி 


    உயிரிழந்த 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 3 Dec 2025 11:05 AM IST

    மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story