இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Nov 2025 11:30 AM IST
பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது - டொனால்டு டிரம்ப்
33 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவில் அணு ஆயுத சோதனை நடைபெற உள்ளது.
- 4 Nov 2025 11:28 AM IST
கோவை வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை - மு.க.ஸ்டாலின் உறுதி
இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 4 Nov 2025 11:22 AM IST
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - முழு விவரம்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டார்.
- 4 Nov 2025 11:21 AM IST
கோவை பாலியல் வழக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து காவல் ஆணையர் விளக்கம்
அவசர காலங்களில் காவலன் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டுமென காவல் ஆணையர் தெரிவித்தார்.
- 4 Nov 2025 11:20 AM IST
தொடங்கியது சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
தற்போதுள்ள வாக்காளர்களின், முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Nov 2025 11:19 AM IST
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்...!
மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
- 4 Nov 2025 10:33 AM IST
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவம்பர் 4ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கூறுகையில், “நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறி இருந்தார். மேலும் 2026ஆம் ஆண்டு சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் தேதி தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று காலை (செவ்வாய் கிழமை) வெளியிடப்பட உள்ளது.
- 4 Nov 2025 10:28 AM IST
திருப்பூர்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - பரபரப்பு சம்பவம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
- 4 Nov 2025 10:26 AM IST
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. உண்மையான அதிமுக இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- 4 Nov 2025 10:24 AM IST
பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை
பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.



















