இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்


இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்
x

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வான செங்கோட்டையனை சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ”தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறும் அதிமுகவின் பிரிவு, உண்மையான அதிமுக அல்ல. அதிமுக கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க அவகாசம் தேவை.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story