திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்...!
ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக மனோஜ் பாண்டியன் செயல்பட்டு வருகிறார்
சென்னை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றிபெற்ற இவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திராவிடக்கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இணைந்ததாக மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், இன்று மாலை 4 மணிக்கு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story








