இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Nov 2025 12:44 PM IST
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்; தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
- 4 Nov 2025 12:40 PM IST
கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்களுக்கு வழங்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே
கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தற்காப்புக்காக பெண்களுக்கு அதிமுக சார்பில் பெப்பர் ஸ்பிரே விநியோகிக்கப்பட்டது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கப்பட்டது.
- 4 Nov 2025 12:24 PM IST
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணி - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்
இந்த அணியில் மந்தனா, ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகிய 3 இந்திய வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
- 4 Nov 2025 12:23 PM IST
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி ஜித்தேஷ் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 4 Nov 2025 12:21 PM IST
‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்திலிருந்து "ஜோடி பொருத்தம்" என்ற பாடல் வெளியானது
ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
- 4 Nov 2025 12:20 PM IST
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம்: இந்திய பயனர்களுக்கு ஓபன் ஏஐ நிறுவனம் சலுகை
‘ஓபன் ஏஐ’ நிறுவனம் தனது பிரத்யேக ‘சாட்ஜிபிடி கோ’ சந்தா சேவையை இந்திய பயனா்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்தது.
- 4 Nov 2025 12:18 PM IST
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு தவறிவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்
காவல் துறையை தி.மு.க. அரசு செயலிழக்க வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
- 4 Nov 2025 12:16 PM IST
தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? - மனோஜ் பாண்டியன் விளக்கம்
தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 4 Nov 2025 11:33 AM IST
ஐ.டி. நிறுவனங்களில் இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம்
உலகம் முழுவதும் ஏ.ஐ.யை காரணம் காட்டி 1 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 4 Nov 2025 11:32 AM IST
இமயமலையில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 7 பேர் பலி
உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர்.



















