இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Oct 2025 10:45 AM IST
கோவா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
2027 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்காது என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி தனித்துதான் போட்டியிடும் என்றும், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு நேரடியாக எம்.எல்.ஏக்களை வழங்குவது போல ஆகிவிடும் என்றும் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
- 5 Oct 2025 10:39 AM IST
ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது - ஹர்பஜன் சிங்
இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 5 Oct 2025 10:38 AM IST
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 11 முறை சர்வதேச ஒருநாள் போட்டியில் மோதி இருக்கின்றன.
- 5 Oct 2025 10:35 AM IST
கரூர் துயர சம்பவம்: ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது. இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்த ஏ.டி.எஸ்.பி. பிரேம் ஆனந்த், வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் ஒப்படைத்துள்ளார்.
- 5 Oct 2025 10:32 AM IST
3 மாடி கட்டிடம் ஆட்டோ மீது விழுந்து மூதாட்டி பலி: கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பேரக் குழந்தைகளான யாஸ்மின்(5) மற்றும் தவ்ஹீத் சுலைமான் (7) ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- 5 Oct 2025 10:30 AM IST
நெல்லையில் 7-ந்தேதி கடையடைப்பு போராட்டம் - வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
லாரிகள் மாநகரப் பகுதிக்குள் வர மாவட்ட கலெக்டர் தடை விதித்தது தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- 5 Oct 2025 10:28 AM IST
த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 5 Oct 2025 10:26 AM IST
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்த 10 பேர் கைது
கைது செய்யப்பட்டுள்ள உக்னா அமைப்பின் கமாண்டர், மெய்தி சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
- 5 Oct 2025 10:25 AM IST
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக திருத்த நடவடிக்கை குறித்த அறிவிப்பை சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ளார்.
- 5 Oct 2025 10:23 AM IST
கட்சியின் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டை அணுக விஜய் திட்டம்
புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
















