இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Oct 2025 3:56 PM IST
கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசி முயன்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதவெறி தலைக்கு ஏறிய அந்த வழக்கறிஞரை வன்மையாக கண்டிக்கிறோம். 2014 பாஜக அரசு பொறுப்பேற்றுதற்குப் பிறகு இந்திய பன்முகத் தன்மைக்கு சவால் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த உரிமைகளை மீட்க வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிகுமார் கூறியுள்ளார்.
- 7 Oct 2025 3:47 PM IST
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 7 Oct 2025 3:31 PM IST
கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை நீக்கும் ஈரான்
ஈரானின் நாணயமான ரியாலில் இருந்து 4 பூஜ்யங்களை நீக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் படி, 10,000 ரியால்கள் 1 ரியாலாக மாற்றப்படும். ஆனால், ரியாலின் மதிப்பில் மாற்றம் இருக்காது. ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு, 11,50,000ஆக குறைந்துள்ளதால், பூஜ்ஜியங்களை நீக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
- 7 Oct 2025 3:28 PM IST
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
2025ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 7 Oct 2025 1:45 PM IST
நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
நடிகை ஷில்பா ஷெட்டியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 4.30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
- 7 Oct 2025 1:43 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை மறுநாள் (09-10-2025) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- 7 Oct 2025 1:42 PM IST
பறவை மோதி பழுதடைந்த விமானத்தில் சென்னை வந்த பயணிகள் - பரபரப்பு
பழுதடைந்த விமானம் என தெரியாமல் வந்த பயணிகள் சென்னையில் பத்திரமாக தரையிறங்கினர்.
- 7 Oct 2025 1:41 PM IST
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
- 7 Oct 2025 1:40 PM IST
கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 7 Oct 2025 1:38 PM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 10ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
















