இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Oct 2025 12:58 PM IST
விஜய் மீது விமர்சனம் ஏன்..? - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் விமர்சனம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகள்தான் இதில் அரசியல் செய்கின்றன.
விஜய்யை கையில் எடுக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது. சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும். விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 Oct 2025 12:49 PM IST
2வது டெஸ்ட்டுக்கு முன் இந்திய வீரர்களுக்கு விருந்து அளிக்க கம்பீர் முடிவு
இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 10-ந் தேதி தொடங்குகிறது.
- 7 Oct 2025 12:48 PM IST
உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மரணம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான பெர்னார்ட் ஜூலியன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
- 7 Oct 2025 12:46 PM IST
நடிகர் அஜித்குமார் அணி பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 7 Oct 2025 12:45 PM IST
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது. தலைமை நீதிபதி மீது 71 வயது வக்கீல் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
- 7 Oct 2025 12:43 PM IST
மலையாள சினிமாவில் அதிக வசூல்: சாதனை படைத்த "லோகா" திரைப்படம்
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான "லோகா" மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்துள்ளது.
- 7 Oct 2025 12:41 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 7 Oct 2025 11:55 AM IST
இமயமலையில் இருந்து டாக்டர் ராமதாசை நலம் விசாரித்த ரஜினிகாந்த்
ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த், ராமதாசை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
- 7 Oct 2025 11:52 AM IST
உற்பத்தி துறையின் 'லீடராக' தமிழ்நாடு மாறி வருகிறது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய விண்வெளிதுறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- 7 Oct 2025 11:42 AM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
ஆந்திரப் பிரதேச மீனவர்கள் பறிமுதல் செய்து வைத்துள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
















