இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Oct 2025 9:40 AM IST
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் கொல்லத்துடன் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 7 Oct 2025 9:39 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு; அ.தி.மு.க.-த.வெ.க.வினர் கைது
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க. மற்றும் தவெ.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
- 7 Oct 2025 9:36 AM IST
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ. 90 ஆயிரத்தை நெருங்கியது
ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை, நேற்று ஒருசவரன் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
- 7 Oct 2025 9:20 AM IST
அஜித்குமார் கொலை வழக்கு: கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- 7 Oct 2025 9:19 AM IST
அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் கைது
கோவையில் அண்ணாமலை பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டிய பா.ஜனதா நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 7 Oct 2025 9:17 AM IST
கரூர் சம்பவம் எதிரொலி: தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க விஜய் ஆலோசனை
கரூர் சம்பவத்திற்கு பிறகு. தவெக தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும். ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசித்து வருகிறார். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருக்கிறது.
- 7 Oct 2025 9:16 AM IST
தேர்தலை சந்திக்க தீவிரம்.. எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க பொறுப்பாளர்கள் இன்று சந்திப்பு
சென்னை வந்துள்ள பா.ஜனதா பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
- 7 Oct 2025 9:15 AM IST
ராசிபலன் (07-10-2025): இந்த ராசி காதலர்களுக்கு பொறுமை அவசியம்
கடகம்
பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களின் சொல்படி நடப்பது மிகுந்த நன்மை பயக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஊதா














