இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Oct 2025 10:01 AM IST
திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்
திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
- 8 Oct 2025 9:59 AM IST
பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இன்று மோதல்
கொழும்பில் இன்று நடக்கும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 16 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 Oct 2025 9:58 AM IST
செப்டம்பர் மாத ஐசிசி விருதுக்கான போட்டியில் அபிஷேக், குல்தீப்
இந்தியாவின் அபிஷேக் ஷர்மா, குல்தீப் யாதவ், ஜிம்பாப்வேயை சேர்ந்த பிரையன் பென்னட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- 8 Oct 2025 9:56 AM IST
விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிதாலிக்கு கவுரவம்
விசாகப்பட்டினம் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா பெயரை சூட்ட வேண்டும் என ஸ்மிர்தி மந்தனா கோரிக்கை விடுத்திருந்தார்.
- 8 Oct 2025 9:53 AM IST
கோலி, ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கு எப்படி தேர்வு செய்தார்கள்? முன்னாள் கேப்டன்
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.
- 8 Oct 2025 9:51 AM IST
மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் கூட்டணி சேரப்போவது இவரா?
ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
- 8 Oct 2025 9:49 AM IST
"இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
தனுஷ் இயக்கிய நடித்த "இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
- 8 Oct 2025 9:48 AM IST
விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
விஜய்யின் பிரசார பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரசார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 8 Oct 2025 9:43 AM IST
ரெயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றலாம்: வருகிறது புதிய வசதி
பயண தேதியில் மாற்றம் ஏற்பட்டால் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
- 8 Oct 2025 9:42 AM IST
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: வருகிறது சூப்பர் வசதி
டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இந்தியாவில் சாலையோரை கடை முதல் மிகப்பெரிய மால்கள் வரை அனைத்திலுமே யு.பி.ஐ. பரிமாற்றம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த யு.பி.ஐ. என்ற வங்கி கணக்கில் இருந்து செய்யப்படும் பரிமாற்றத்திற்கு பின் நம்பர். ஓ.டி.பி. போன்ற முறைகள் வழியாக இதுவரை பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இவற்றுக்கு அடுத்த கட்டமாக ஆதார் அடிப்படையிலான முகஅடையாள சரிபார்ப்பு நடைமுறைக்கு வர உள்ளது.


















