இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
x
தினத்தந்தி 9 Aug 2025 9:07 AM IST (Updated: 9 Aug 2025 8:03 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 9 Aug 2025 9:29 AM IST

    அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்

    பிரபல அமெரிக்க விண்வெளி வீரரான ஜிம் லோவெல் (97) காலமானார்.

    1970 ஆம் ஆண்டு தோல்வியில் முடிந்த 'அப்பல்லோ 13' சந்திர பயணத்திற்கு தலைமை தாங்கி, விண்வெளியில் இருந்து மற்ற இரு வீரர்களுடன் சாதூர்யமாக பூமி திரும்பினார்.

  • 9 Aug 2025 9:22 AM IST

    பொங்கலுக்குள் 110 புதிய சொகுசு பஸ்கள் இயக்கம்


    பொங்கல் பண்டிகைக்குள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், படுக்கை வசதியுடன் கூடிய, 110 புதிய சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

  • 9 Aug 2025 9:19 AM IST

    பராமரிப்பு பணி: சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு


    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 11-ந் தேதி 19 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 9 Aug 2025 9:18 AM IST

    ''அது மட்டும் போதும்'' - விஜயகாந்தின் மகன் கண்ணீர் மல்க பேச்சு


    "கேப்டன் பிரபாகரன்" படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை, டிரெய்லர் மறு வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசினார்.


  • 9 Aug 2025 9:15 AM IST

    தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு முதல் இடம்


    கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்து உள்ளது.



  • 9 Aug 2025 9:14 AM IST

    காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?


    தமிழகத்தின் 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 9 Aug 2025 9:12 AM IST

    கனமழை எதிரொலி.. திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


    கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 9 Aug 2025 9:11 AM IST

    மதுரை த.வெ.க. மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார்.. வெளியான முக்கிய தகவல்


    கொடி ஏற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல், தீர்மானம், விஜய் உரை, நன்றியுடன் மாநாடு நிறைவுபெறுகிறது. மாநாட்டில் விஜய் தவிர முக்கிய நபர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜய் மட்டுமே பேசுகிறார். மதுரை விமானம் நிலையம் முதல் மாநாடு நடக்கும் இடம் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது என்று த.வெ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  • 9 Aug 2025 9:09 AM IST

    இன்றைய ராசிபலன் - 09.08.2025

    மேஷம்

    சிறிய வியாபாரம் தொடங்க நல்ல காலம். பெண்களுக்கு உயர்வு தரும் நாள். கல்வியில் சாதனை பெறலாம். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலம். வழக்குகள் சாதகமாக முடியும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story