இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Dec 2025 1:29 PM IST
இத்தனை லட்சம் பேருக்கு கிடைக்கப்போகிறதா..? 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்
மேலும் பல பெண்கள், தங்களையும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
- 11 Dec 2025 1:27 PM IST
சபரிமலை: மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு
சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது.
- 11 Dec 2025 12:38 PM IST
மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி முதல் நடைதிறப்பில் மாற்றம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் வருகிற 16-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(ஜனவரி) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது.
- 11 Dec 2025 12:36 PM IST
தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 11 Dec 2025 12:34 PM IST
நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (12.12.2025)
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
- 11 Dec 2025 12:33 PM IST
திமுகவில் இணைந்தது ஏன்? - பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார். கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பி.டி.செல்வக்குமார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
- 11 Dec 2025 12:06 PM IST
வரும் 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் - அன்புமணி அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து வரும் 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை முதல் 20.12.2025 சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார். .
- 11 Dec 2025 11:36 AM IST
தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுவரை 46 நாட்களில் 105 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 11 Dec 2025 11:17 AM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
- 11 Dec 2025 10:58 AM IST
தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
தவெக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பனையூரில் தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
















