இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Nov 2025 9:35 AM IST
விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் கிடைக்குமா? - தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்களே இருக்கும் நிலையில், த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் விஜய் இறங்கியுள்ளார். முன்னதாக த.வெ.க. கட்சி கடந்த பிப்ரவரி 7-ந் தேதி அன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களுக்கு என்று தேர்தல் கமிஷன் 184 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது.
- 12 Nov 2025 9:32 AM IST
சற்று குறைந்த தங்கம் விலை.. அதிகரித்த வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
- 12 Nov 2025 9:05 AM IST
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ‘பாராசூட்’ சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் 3 இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது தான் நோக்கமாகும். இதனை வருகிற 2027-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
- 12 Nov 2025 9:03 AM IST
யார் இந்த உமர்? காஷ்மீர் டாக்டரின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் அரியானா மாநிலம் பரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
- 12 Nov 2025 9:03 AM IST
கோவிலுக்குள் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: தப்பியோடிய நபர் சுட்டுப்பிடிப்பு
கொலையில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது எஸ்.ஐ.யை தாக்கிவிட்டு அவர் தப்ப முயற்சி செய்தார். தப்ப முயன்ற நாகராஜை காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த எஸ்.ஐ. கோட்டியப்ப சாமியும், நாகராஜும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 12 Nov 2025 9:02 AM IST
‘பயங்கரவாத அமைப்புடன் எனது மகளுக்கு தொடர்பு இருப்பது தெரியாது’ - பெண் டாக்டரின் தந்தை
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் என்பவர் காஷ்மீரைச் சேர்ந்த போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பெண் டாக்டர் காஷ்மீர் அழைத்து செல்லப்பட்டார்.
- 12 Nov 2025 9:01 AM IST
ராசிபலன் (12.11.2025): வரவேண்டிய பணம் இன்று வசூலாகும்..!
கன்னி
இரும்பு வியாபாரம் வருவாயை அதிகரிக்கும்.கணினி துறையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். தம்பதிகளிடையே மகிழ்ச்சி பொங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்















