இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Nov 2025 9:43 AM IST
திரைக்கு வரும் முன்பே சாதனை படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக திரையரங்க உரிமை ரூ.100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ரூ.80 கோடிக்கும் விற்கப்பட்டு உள்ளன.
- 13 Nov 2025 9:38 AM IST
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
- 13 Nov 2025 9:24 AM IST
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது டாக்டர் உமர்தான் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிரமாக விசாரித்து வருகிறது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகளும், தடயவியல் சோதனை நிபுணர்களும் சென்று அங்குலம் அங்குலமாக தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- 13 Nov 2025 9:23 AM IST
ஐ.பி.எல்.: முன்னணி ஆல் ரவுண்டரை வாங்க அர்ஜுன் தெண்டுல்கரை டிரேடிங்கில் மாற்றும் மும்பை..?
மும்பை - லக்னோ அணிகள் இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 13 Nov 2025 9:21 AM IST
நடிகர் உபேந்திரா-மனைவியின் செல்போன்களை முடக்கி பண மோசடி- பீகார் பட்டதாரி கைது
நடிகர் உபேந்திரா, அவரது மனைவியின் செல்போன்களை முடக்கி ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த பீகாரை சேர்ந்த பட்டதாரி கைது செய்யப்பட்டு உள்ளார்.
- 13 Nov 2025 9:20 AM IST
திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது: மதுரை ஐகோர்ட்டு கருத்து
உணர்ச்சி ரீதியான ஈர்ப்புக்கும், உடல் ரீதியான உறவுக்கும் இடையில் உள்ள கோடு தெளிவற்றது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
- 13 Nov 2025 9:18 AM IST
இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 13-ந்தேதி (இன்று) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
- 13 Nov 2025 9:17 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் விடுவிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
- 13 Nov 2025 9:15 AM IST
பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவ தளபதி.. அரசியல் மாற்றம் உருவாகிறதா..?
நீதித்துறை முதல் அணு ஆயுதம் வரை அனைத்தையும் ராணுவ தளபதி தனது கட்டுப்பாட்டில் எடுத்தார்.
- 13 Nov 2025 9:14 AM IST
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
















