இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Dec 2025 1:46 PM IST
சில நிமிடங்கள் மட்டுமே மெஸ்சி இருந்ததால் ஆத்திரம்.. மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்
கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
- 13 Dec 2025 1:42 PM IST
2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா விஜயகாந்த் பதில்
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
- 13 Dec 2025 1:41 PM IST
ரசாயன ஆயுதங்களை 600 முறை பயன்படுத்திய உக்ரைன்; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு
தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.
- 13 Dec 2025 1:13 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 12 மணி நிலவரம்
கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிற்பகல் 12 மணி நிலவரப்படி ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) முன்னிலை வகித்து வருகிறது.
- 13 Dec 2025 12:39 PM IST
பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 13 Dec 2025 12:38 PM IST
இந்தியா மீதான 50 சதவீத வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் தீர்மானம் தாக்கல்
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் 50 சதவீத வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 13 Dec 2025 12:19 PM IST
குற்றாலத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்: அருவிகளில் உற்சாக குளியல்
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- 13 Dec 2025 11:31 AM IST
பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் 70 அடி உயர சிலை திறப்பு; ரசிகர்கள் உற்சாக கோஷம்
கொல்கத்தா பயணம் முடிந்ததும், கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிற்பகலில் ஐதராபாத்துக்கு செல்கிறார்.
- 13 Dec 2025 11:30 AM IST
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
- 13 Dec 2025 11:13 AM IST
மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..?
இன்று தங்கம் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.12,370-க்கும். ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


















