இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Oct 2025 10:07 AM IST
ஐசிசி தரவரிசை: குல்தீப் யாதவ் முன்னேற்றம்
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரு இடம் முன்னேறி மறுபடியும் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
- 16 Oct 2025 10:04 AM IST
ஊட்டி அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்
புலி நடமாட்டத்தால் கிராம மக்கள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
- 16 Oct 2025 10:01 AM IST
‘கோச்சடையான்’ பட விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பெங்களூரு கோர்ட்டில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.
- 16 Oct 2025 10:00 AM IST
விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
- 16 Oct 2025 9:59 AM IST
மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவல், மர்ம காய்ச்சல்; 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் வருகிற நவம்பரில் ஏறக்குறைய 4 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுத உள்ள சூழலில் இந்த திடீர் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
- 16 Oct 2025 9:46 AM IST
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 16 Oct 2025 9:45 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை
தென்காசியில் பரவலாக கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- 16 Oct 2025 9:44 AM IST
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 16 Oct 2025 9:41 AM IST
கனமழை எதிரொலி; 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
- 16 Oct 2025 9:39 AM IST
ராசிபலன் (16-10-2025): பெரிய தொகை கைக்கு வந்து சேரும்.. எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?
தனுசு
இன்று பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள் வந்து போகும். ஆதலால், இறைவனை மட்டும் இன்று பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால், தியானம் செய்யவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


















