இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Oct 2025 11:40 AM IST
கிட்னி திருட்டு: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. முன்னதாக 'கிட்னிகள் ஜாக்கிரதை' என அதிமுக எம்எல்ஏக்கள் பேட்ஜ் அணிந்து பேரவையில் பங்கேற்றனர்.
- 16 Oct 2025 11:37 AM IST
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்
பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் அவதூறு பரப்பியதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாய் கிரிசில்டா தரப்பில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரங்கராஜ் அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்ப பெற்று மன்னிப்பு கேட்க ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்துள்ளார். தவறினால், உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்ரும் ஜாய் கிரிசில்டா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 16 Oct 2025 11:14 AM IST
நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16 Oct 2025 11:13 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்: விராட் கோலி வெளியிட்ட முக்கிய பதிவு
இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்
- 16 Oct 2025 11:11 AM IST
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
- 16 Oct 2025 10:53 AM IST
பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவுர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யவதற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 16 Oct 2025 10:51 AM IST
வீரபாண்டிய கட்டபொம்மனின் 226ஆவது நினைவு நாள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- 16 Oct 2025 10:45 AM IST
இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை
இலங்கை பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஹரிணி அமரசூர்யா இந்தியாவிற்கு வர உள்ளார்.
- 16 Oct 2025 10:44 AM IST
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியா வருகை; இந்திய துணை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
பிரேசில் துணை ஜனாதிபதி இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு மந்திரி ஹர்தீப் சிங் புரியை சந்தித்து பேச இருக்கிறார்.
- 16 Oct 2025 10:41 AM IST
அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


















