இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Dec 2025 12:02 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது
- 16 Dec 2025 11:22 AM IST
நடிகர் நாசர் வைத்த கோரிக்கை - மேடையில் வைத்தே மு.க.ஸ்டாலின் சொன்ன வார்த்தை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் நாசருக்கு கலைஞர் விருது வழங்கி கவுரவித்தார்.
- 16 Dec 2025 11:21 AM IST
மார்கழி மாத பிறப்பு: தங்க கவசத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்
ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
- 16 Dec 2025 11:19 AM IST
சவுதி அரேபியாவில் இருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: வாலிபர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 16 Dec 2025 11:15 AM IST
புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- 16 Dec 2025 11:00 AM IST
“நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ..!” - பொதுமக்களை காப்பாறிய நபரை பாராட்டிய அந்நாட்டு பிரதமர்
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 15 பேரை கொன்றது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- 16 Dec 2025 10:57 AM IST
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் விடுதி ஊழியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத விடுதி மேனேஜர்கள் ஊழியர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
- 16 Dec 2025 10:35 AM IST
மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர் செங்கல்பட்டு. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி. விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 16 Dec 2025 10:34 AM IST
இந்த வார விசேஷங்கள்: 16-12-2025 முதல் 22-12-2025 வரை
16-ந் தேதி (செவ்வாய்)
* கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை விழா தொடக்கம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
- 16 Dec 2025 10:23 AM IST
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: உறுதி மொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர்
த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன்படி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார்.
















