இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
தினத்தந்தி 16 Dec 2025 8:45 AM IST (Updated: 17 Dec 2025 8:34 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 16 Dec 2025 10:18 AM IST

    மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை விமர்சித்த இந்திய வீரர் 


    இந்த நிலையில் மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தை ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் அபினவ் பிந்த்ரா விமர்சித்துள்ளார்.

  • 16 Dec 2025 10:16 AM IST

    ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு ஷபாலி தேர்வு 


    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. கடந்த மாதத்துக்கான (நவம்பர்) சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • 16 Dec 2025 10:14 AM IST

    ஆஷஸ் 3-வது டெஸ்ட் நாளை தொடக்கம் 


    ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  • 16 Dec 2025 10:11 AM IST

    தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


    தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்று (டிச.16) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் திடீரென மழை பெய்யக்கூடும் என்றும், 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • 16 Dec 2025 10:04 AM IST

    5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு 


    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

  • 16 Dec 2025 9:46 AM IST

    100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: மக்களவையில் திமுக நோட்டீஸ் 


    கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, பெயர் மாற்றி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  • 16 Dec 2025 9:45 AM IST

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை கைது செய்ய அரசு தீவிரம்


    ரூ. 23 கோடி ஊழல் வழக்கில் அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் இலங்கை வந்த உடன் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

  • 16 Dec 2025 9:43 AM IST

    தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் 


    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மேற்கு தாம்பரம். சண்முகம் சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  • 16 Dec 2025 9:41 AM IST

    மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் முடிவு? 


    விழுப்புரத்தில் சி.வி.சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக முற்றுப்புள்ளி வைத்தது.

  • 16 Dec 2025 9:39 AM IST

    சவரனுக்கு ரூ.98 ஆயிரமாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? 


    தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,350-க்கும், சவரன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   

1 More update

Next Story