இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Oct 2025 2:07 PM IST
'பைசன்' படம் பார்த்து...கட்டியணைத்து அன்பை பரிமாறிய இயக்குனர் மாரி செல்வராஜ் - பா.ரஞ்சித்
'பைசன்' திரைப்படம் நேற்று வெளியானநிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- 18 Oct 2025 1:42 PM IST
தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் - தவெக நிர்வாகிகளுக்கு புஸ்சி ஆனந்த் உத்தரவு
இந்த ஆண்டில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று தவெக நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Oct 2025 1:38 PM IST
“இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் முதல்-அமைச்சர் வாழ்த்து கூறுவதில்லை..” - வானதி சீனிவாசன்
தீபாவளி என்று சொன்னதும் சபாநாயகர் ஏன் பதறினார் என்பது புரியவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
- 18 Oct 2025 1:37 PM IST
பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: டிரம்ப் சொல்கிறார்
இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன் என்று டிரம்ப் கூறினார்.
- 18 Oct 2025 1:11 PM IST
அப்சரா ரெட்டியின் மான நஷ்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபருக்கு எதிராக அதிமுக நிர்வாகி அப்சரா ரெட்டி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் யூடியூபருக்கு எதிரான அப்சரா ரெட்டியின் மான நஷ்ட வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- 18 Oct 2025 12:59 PM IST
தீபாவளி விருந்தாக அமைந்ததா டியூட் ? சினிமா விமர்சனம்
'சர்ப்ரைஸ் ஈவென்ட் கம்பெனி" நடத்தி வரும் பிரதீப் ரங்கநாதனும், மமிதா பைஜூவும் உறவினர்கள். அத்தை பையனான பிரதீப் ரங்கநாதன் மீது ஒரு கட்டத்தில் மமிதா பைஜூவுக்கு காதல் மலர்கிறது.
- 18 Oct 2025 12:57 PM IST
2 தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
- 18 Oct 2025 12:56 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- 18 Oct 2025 12:55 PM IST
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்தபடி சாலையில் சென்றன.
- 18 Oct 2025 12:54 PM IST
சபரிமலை அய்யப்பன்கோவில் மேல்சாந்தியாக சாலக்குடியைச் சேர்ந்த பிரசாத் தேர்வு
பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன்கோயில் மேல்சாந்தியாக சாலக்குடியைச் சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாளிகைபுரம் மேல்சாந்தியாக கொல்லம் பகுதியைச் சேர்ந்த மனு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
14 பேர் கொண்ட பட்டியலில் இருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகளை எடுத்து நடத்துபவராக மேல்சாந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
















