இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 Oct 2025 4:43 PM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ.11,950-க்கும், ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காலையில் தங்கம் விலை குறைந்த நிலையில், தற்போது மாலையில் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 18 Oct 2025 4:43 PM IST
தீபாவளிக்கு மறுநாள் இறைச்சி கடைகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதேபோல், ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- 18 Oct 2025 4:35 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தவெக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். அதேவேளை, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூகவலைதளங்கள் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி அவதூறு பரப்பியதாக சென்னை கோடம்பாக்கத்தை ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் (வயது 64) என்பவரை கடந்த 7ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
- 18 Oct 2025 4:13 PM IST
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி, தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோவிலில் வரும் 22ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளன.
- 18 Oct 2025 4:11 PM IST
குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி...திருமணத்திற்குப் பிறகும் குறையாத மதிப்பு - யார் அந்த நடிகை தெரியுமா?
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது கதாநாயகியாக முத்திரை பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார்.
- 18 Oct 2025 4:05 PM IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 Oct 2025 4:03 PM IST
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
- 18 Oct 2025 3:46 PM IST
சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், மிதமான வெற்றியைப் பெற்றது. அதர்வா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். லாவண்யா திரிபாதி மற்றொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் தாயான பிறகு வெளியான முதல் படம் இது. ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த திரில்லர் படம் ஐஎம்டிபி-ல் 7.2 புள்ளியை பெற்றுள்ளது.
- 18 Oct 2025 3:07 PM IST
கிட்னியை விற்றாவது படம் நடிப்பேன்...பிரபல நடிகை அதிர்ச்சி கருத்து
பிரபல நடிகை ரேகா போஜ். இவர் மிகக் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும், அவர் வெளியிடும் கருத்துகள் சில சமயம் சர்ச்சையை உருவாக்கும். அவரது சமூக ஊடகப் பதிவுகள் அவ்வப்போது அப்படித்தான் இருக்கும். இதற்கிடையில், சமீபத்திய பேட்டியில் பங்கேற்ற இவர், அதிர்ச்சியூட்டும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
- 18 Oct 2025 2:54 PM IST
காசியில் ரிஷப் ஷெட்டி சிறப்பு பூஜை...வைரலாகும் வீடியோ
காந்தாரா சாப்டர் 1 பிளாக்பஸ்டராக மாறியுள்ளநிலையில், ரிஷப் ஷெட்டி காசிக்கு சென்றிருக்கிறார். அங்கு, அவர் சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
















