இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Nov 2025 3:32 PM IST
ரீ-ரிலீஸாகும் அஜித்தின் “அமர்க்களம்”
அஜித், ஷாலினி நடிப்பில் உருவான ‘அமர்க்களம்’ திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாக உள்ளதாக இயக்குநர் சரண் அறிவித்துள்ளார்.
- 20 Nov 2025 3:31 PM IST
சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு
சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 20 Nov 2025 3:30 PM IST
முதல் மந்திரியாக 10-வது முறையாக பதவியேற்ற நிதிஷ்குமார் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல் மந்திரியாக 10-வது முறையாக நிதிஷ்குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 20 Nov 2025 3:28 PM IST
உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 213 நபர்களுக்கு முதல்-அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- 20 Nov 2025 3:24 PM IST
‘நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 20 Nov 2025 3:05 PM IST
ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு
16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
- 20 Nov 2025 3:03 PM IST
கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிக்கப்படவில்லை - நயினார் நாகேந்திரன்
பிரதமர் மோடியால் முடியாதது எதுவுமில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார்.
- 20 Nov 2025 3:00 PM IST
6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 Nov 2025 2:59 PM IST
“ஏஐ” தொழில்நுட்பம் மிகப்பெரிய பயத்தை தருகிறது - நடிகை கீர்த்தி சுரேஷ்
சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படம் வருகிற 28-ம் தேதி வெளியாகிறது.
- 20 Nov 2025 2:55 PM IST
மக்களாட்சி மாண்பை மதிக்காத கவர்னர்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


















