இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Aug 2025 10:22 AM IST
இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்க்கிறோம் - சீன தூதர் தகவல்
இந்தியா மீது 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து உள்ளது.
- 22 Aug 2025 10:21 AM IST
சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு - மு.க.ஸ்டாலின்
சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- 22 Aug 2025 10:17 AM IST
இன்று ஆவணி அமாவாசை.. இந்த நாளில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
இந்து மதத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதிக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை, பாத்ரபாத அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது குஷாக்ரஹானி அமாவாசை அல்லது பித்தோரி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
- 22 Aug 2025 10:14 AM IST
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,215க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.73,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 128க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,28,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 22 Aug 2025 10:07 AM IST
இன்று சென்னை தினம்.. மின்சார ரெயில்களுக்கு முன்னோடியான டிராம் வண்டிகள்
ஒரு காலத்தில் சென்னையில் தங்கச் சாலை, கடற்கரைச் சாலை, பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு. பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் டிராம் வண்டிகள் ஓடின.
- 22 Aug 2025 10:04 AM IST
386-வது பிறந்த நாள் இன்று.. வணக்கம் சென்னை!
சென்னை மாநகரம் முழுவதும் இன்று வானுயர கட்டிடங்கள் நிமிர்ந்து நின்றாலும், ஆங்காங்கே பாரம்பரிய கட்டிடங்களும் கலைநயம் மாறாமல் நயமாக கடந்த கால வரலாற்றை பறைசாற்றி நிற்கின்றன.
- 22 Aug 2025 9:37 AM IST
சென்னையின் முக்கிய அடையாளங்கள்... பெயர் வந்தது எப்படி?
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் விற்பனை செய்யும் துணிகள், கப்பலில் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்டதால், வியாபாரம் செய்யும் முன் துணிகளை புதிதுபோல் வெளுத்து கொடுப்பதற்கு என வேலையாட்களை வைத்திருந்தனர். அவர்களை குடியேற்றிய இடம் வாஷர்மென்பெட். அதுதான் இன்றைய வண்ணாரப்பேட்டை.
- 22 Aug 2025 9:36 AM IST
சென்னையில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் வயது தெரியுமா?
சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் உள்ள கோவில்கள். தேவாலயங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் கட்டப்பட்ட ஆண்டு, வயது விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
- 22 Aug 2025 9:24 AM IST
அமித்ஷா இன்று நெல்லை வருகை: தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனை
நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார்.
- 22 Aug 2025 9:23 AM IST
தனுசு
பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
















