இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
x
தினத்தந்தி 24 May 2025 9:15 AM IST (Updated: 24 May 2025 8:14 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 24 May 2025 3:22 PM IST

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”

    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே.25, 26ம் தேதிகள்) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 20 செ.மீ. மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11-20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் இரு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

  • 24 May 2025 3:17 PM IST

    மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 May 2025 3:13 PM IST

    டெஸ்ட் அணிக்கு தேர்வான இளம் வீரர்கள்.. முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம் ஏன்..? பி.சி.சி.ஐ. விளக்கம்


    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 


  • 24 May 2025 2:00 PM IST

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

  • 24 May 2025 1:46 PM IST

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இதேபோன்று கோலியும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். கோலி, ரோகித் இல்லாத சூழலில் இந்திய அணி விளையாட உள்ளது.

    இந்நிலையில், பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டு உள்ளார். முகமது ஷமி முழு உடல் தகுதியுடன் இல்லை. அதனால், அவர் அணியில் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • 24 May 2025 1:02 PM IST

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநிலத்திற்கான நிதியை கேட்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

    நாங்கள் ஈ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. மிரட்டி அடிபணிய வைக்கும் அளவிற்கு தி.மு.க. அடிமை கட்சி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

  • 24 May 2025 12:42 PM IST

    மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி சந்திப்பு

    டெல்லியில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது.

  • 24 May 2025 12:29 PM IST

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

  • 24 May 2025 11:24 AM IST

    டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. ஆளும் முதல்-மந்திரிகள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க பிரதமர் நரேந்திரமோடியிடம், மு.க. ஸ்டாலின் நேரடியாக வலியுறுத்த இருக்கிறார். இதேபோல், பிற மாநில முதல்-மந்திரிகளும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான நிதியை கேட்க இருக்கின்றனர்.

  • 24 May 2025 11:04 AM IST

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று 80-வது பிறந்தநாள் காணும் நாகலாந்து கவர்னர் இல. கணேசனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story