இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Aug 2025 9:21 AM IST
வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை
திருவிழா தொடங்குவதையொட்டி வேளாங்கண்ணியில் உள்ள கடலில் நாளை முதல் கடலில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
- 28 Aug 2025 9:19 AM IST
புற்றுநோயால் அவதிப்படும் ஆஸி.முன்னாள் கேப்டன்.. 6-வது முறையாக ஆபரேசன்
6-வது முறையாக ஆபரேசன் செய்திருக்கும் கிளார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தோல் புற்றுநோய் ஆஸ்திரேலியாவில் அதிகமாக உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு ஆபரேசன் நடந்தது. உங்களது தோலை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள் என கனிவோடு கேட்டுக் கொள்கிறேன். வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. எனது விஷயத்தில் தொடர் பரிசோதனைகளும், நோயை முன்கூட்டியே கண்டறிந்தது தான் முக்கியமானது" என்று கூறியுள்ளார்.
- 28 Aug 2025 9:18 AM IST
14 ஐகோர்ட்டு நீதிபதிகள் பணியிட மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் கடந்த 25 மற்றும் 26-ந்தேதிகளில் கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு ஐகோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 14 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.
- 28 Aug 2025 9:16 AM IST
தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை
பள்ளியில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
- 28 Aug 2025 9:15 AM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 28 Aug 2025 9:13 AM IST
விருச்சிகம்
தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை












