இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025
x
தினத்தந்தி 29 Oct 2025 9:46 AM IST (Updated: 29 Oct 2025 8:06 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 29 Oct 2025 4:17 PM IST

    ‘லாலு பிரசாத் மகன் முதல்-மந்திரியாகவோ, சோனியா காந்தியின் மகன் பிரதமராகவோ ஆக முடியாது’ - அமித்ஷா

    243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பீகாரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

  • 29 Oct 2025 3:58 PM IST

    ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

    2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

  • 29 Oct 2025 3:31 PM IST

    ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

    நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும்.

  • 29 Oct 2025 3:16 PM IST

    சுகோயை தொடர்ந்து ரபேல்... மறக்க முடியாத அனுபவம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு

    இந்திய விமான படையின் ரபேல் போர் விமானத்தில் இன்று முதன்முறையாக பறந்து சென்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த முதல் போர் விமான பயணம் ஆனது, தேசத்தின் பாதுகாப்பு திறன் பற்றிய ஒரு புதிய பெருமைக்குரிய உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. இதனை வெற்றியுடன் நடத்தி முடித்ததற்காக, இந்திய விமான படை மற்றும் அம்பாலாவின் விமான படை தளத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். இதன்பின்னர் அவரிடம், ரபேல் போர் விமானம் மற்றும் இந்திய விமான படையின் செயல் திறன்களை பற்றி விரிவாக எடுத்து கூறப்பட்டது.

  • 29 Oct 2025 1:53 PM IST

    மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 29 Oct 2025 1:45 PM IST

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு: அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக மனு

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

  • 29 Oct 2025 1:34 PM IST

    அனுமான் பட இயக்குநரின் ‘மகா காளி’ - வைரலாகும் பிரீ லுக் போஸ்டர்

    இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் பிரசாந்த் வர்மா எழுதியுள்ளார்.


  • 29 Oct 2025 1:17 PM IST

    திருமலை - படிகளில் முழங்கால்களால் ஏறிய நடிகை...வைரலாகும் வீடியோ

    இவர் ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்




  • 29 Oct 2025 1:08 PM IST

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

    பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதை பாதுகாக்கும் வகையில் ரூ.2,000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும். தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அனைத்தையும் அறிவிக்கை செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 29 Oct 2025 1:07 PM IST

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு பணிக்காக வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41 வயது) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story