முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் மாரடைப்பால் உயிரிழப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 8 ஆயிரம் போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன்படி பாதுகாப்பு பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41 வயது) என்பவர் வந்துள்ளார். இவர் நேற்று இரவு கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் கலைவாணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் தலைமை காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com