இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 3-9-2025
x
தினத்தந்தி 3 Sept 2025 9:12 AM IST (Updated: 4 Sept 2025 9:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - மேலும் ஒருவர் கைது
    3 Sept 2025 10:20 AM IST

    போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - மேலும் ஒருவர் கைது

    ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பிரதீப் கூட்டாளி மேத்யூ என்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் மேத்யூ கொக்கைனை பல பிரபலங்களுக்கு கொடுத்தது அம்பலமாகி உள்ளது. மேத்யூ கொடுத்த தகவலின் பேரில் பிரபலங்கள் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 28வது நபராக மேத்யூவை கைது செய்துள்ளனர் சூளைமேடு போலீசார்.

  • காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
    3 Sept 2025 9:45 AM IST

    காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

    நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் அதிக மின்சாரம் காற்று சீசன் காலங்களில் கிடைக்கிறது. தற்போது ஆடி மாதம் முடிந்த பிறகும் காற்றின் வேகம் குறையாமல் வீசுவதால் ராதாபுரம், வள்ளியூர் வட்டாரங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும், குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்தும் காற்றாலை மின் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. நேற்றை நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 3,798 மெகாவாட்டாக இருந்தது.

  • புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
    3 Sept 2025 9:40 AM IST

    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உட்சமாக ரூ.78,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.9,805க்கு விற்பனையாகிறது.சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • வடிகாலில் விழுந்து பெண் பலி - “இயற்கைக்கு மாறான மரணம்“
    3 Sept 2025 9:27 AM IST

    வடிகாலில் விழுந்து பெண் பலி - “இயற்கைக்கு மாறான மரணம்“

    சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • இமாச்சலில் நிலச்சரிவு - 6 பேர்  பலி
    3 Sept 2025 9:26 AM IST

    இமாச்சலில் நிலச்சரிவு - 6 பேர் பலி

    இமாச்சலப் பிரதேசம், சுந்தர்நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

  • மீண்டும் முகக்கவசம்
    3 Sept 2025 9:26 AM IST

    மீண்டும் முகக்கவசம்

    தமிழ்நாடு முழுவதும் 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் என்று தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

  • வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
    3 Sept 2025 9:25 AM IST

    வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • வெள்ளநீர் என்பது ஆசிர்வாதம் - பாக்., மந்திரி சர்ச்சை பேச்சு
    3 Sept 2025 9:25 AM IST

    வெள்ளநீர் என்பது ஆசிர்வாதம் - பாக்., மந்திரி சர்ச்சை பேச்சு

    பாகிஸ்தானில் கொட்டி தீர்த்து வரும் கனமழைக்கு 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீரை ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும், வெள்ளத்தால் குறிப்பாக கிழக்கு பாகிஸ்தான் பகுதி உருக்குலைந்து போயுள்ள நிலையில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெள்ள நீரை சேமிக்க வேண்டும் என்று பாக்.பாதுகாப்பு துறை மந்திரி பேசியுள்ளது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

  • எஸ்பிஐ பயனர்களே உஷார்
    3 Sept 2025 9:24 AM IST

    எஸ்பிஐ பயனர்களே உஷார்

    * எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகளால் பகிரப்படும் போலி செயலி

    * வாட்ஸ் அப் மூலமாக உங்களின் YONO கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக மெசேஜ் வாயிலாக செயலியை அனுப்பும் மோசடி கும்பல்

    * அதனை கிளிக் செய்தால் பணம் திருடு போகும் அபாயம் இருப்பதால் உஷார்

    * எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், இன்டர்நெட் மொபைல் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை  

  • ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
    3 Sept 2025 9:16 AM IST

    ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411-ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 1 மில்லியன் பவுண்டுகள் வழங்கியுள்ளது.

1 More update

Next Story