இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 30 Aug 2025 12:02 PM IST
``சகோதரர் அண்ணாமலை’’ - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில், தமாகா நிறுவனர் ஜிகே மூப்பனார் 24வது நினைவஞ்சலி கூட்டத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தனது சகோதரர் என குறிப்பிட்டார்
- 30 Aug 2025 11:54 AM IST
மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர் - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
சென்னையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், “மூப்பனார் பிரதமராக வருவதைத் தடுத்தனர். நல்லாட்சியை மக்கள் தேடி வருகின்றனர்.
உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டணி நல்ல முறையில் நடத்த வேண்டும். இந்த கூட்டணி மூலமாக மக்களுக்கு செய்ய வேண்டிய தொண்டை ஆற்ற வேண்டும். தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். சிறிய சிறிய பூசல்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட வேண்டும். இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும்” என்று கூறினார்.
- 30 Aug 2025 11:41 AM IST
நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 30 Aug 2025 11:23 AM IST
பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிதி உதவி
2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணி நடந்தது.
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 30 Aug 2025 11:19 AM IST
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மதபோதகருக்கு ஆயுள் தண்டனை
கிருஷ்ணகிரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த மதபோதகர் மிலன்சிங் (54), அவரது 4வது மனைவி ஜீவிதாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- 30 Aug 2025 11:18 AM IST
ஜி.எஸ்.டி. சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் நள்ளிரவில் சரக்குடன் கவிழ்ந்த டேங்கர் லாரி 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு நிலை நிறுத்தப்பட்டது. தாம்பரம் - பல்லாவரம் மார்க்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மேம்பாலம் வழியே மட்டும் போக்குவரத்துக்கு அனுமதியால் கடும் வாகன நெரிசல் பல மணி நேரமாக நீடிக்கிறது.
- 30 Aug 2025 11:15 AM IST
கடலூர்: ஊதியம் கோரி மாநகராட்சி ஊழியர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து நகர்நல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 350க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையென புகார் தெரிவித்துள்ளனர்.
- 30 Aug 2025 11:13 AM IST
ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி புல்லட் ரெயிலில் பயணம்
டோக்கியோவில் இருந்து செண்டாய் நகருக்கு ALFA-X புல்லட் ரெயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
மியாகி மாகாணத்தில் உள்ள ஒரு செமிகண்டக்டர் ஆலையைப் பார்வையிட இருவரும் அங்கு சென்றுள்ளனர்.
- 30 Aug 2025 11:05 AM IST
சென்னையில் நடைபெறும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் நிறுவனர் மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சியில் ஓரே மேடையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தேமுதிக பொருளாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- 30 Aug 2025 10:54 AM IST
‘அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம்’ - சசிகலா
தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சூழலை உருவாக்கி விடக்கூடாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
















