இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025
x
தினத்தந்தி 30 Aug 2025 9:06 AM IST (Updated: 31 Aug 2025 9:16 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 30 Aug 2025 10:53 AM IST

    முதல் படத்திலேயே லாபத்தை யோசிக்காதீர்கள்.. புதிய இயக்குனர்களுக்கு ஆர்.கே.செல்வமணி அறிவுரை


    புதிய இயக்குனர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ, சிந்திக்கவோ கூடாது என்று ஆர்.கே.செல்வமணி அறிவுரை கூறியுள்ளார்.


  • 30 Aug 2025 10:51 AM IST

    திருச்செந்தூர் கோவிலில் சட்டவிரோதமாக தரிசன டிக்கெட் விற்றால் கிரிமினல் நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "கோவிலில் தனிநபர்கள் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக கோவிலை சுற்றி தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

    இதையடுத்து நீதிபதிகள், "கோவிலுக்கு பக்தர்கள் வருவது நிம்மதியை தேடித்தான். அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது" என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும் "இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். அவர் கோவிலின் பாதுகாப்புக்கு தேவைப்படும் கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும்.

    சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அறநிலையத்துறையும், காவல்துறையும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • 30 Aug 2025 10:43 AM IST

    அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இனி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து


    ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


  • 30 Aug 2025 10:35 AM IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,828 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.65 அடியாகவும், நீர் இருப்பு 91.334 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 15,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

  • 30 Aug 2025 10:30 AM IST

    சென்னையில் புதுப்பெண் தற்கொலை

    கடந்த 12 ஆண்டுகளாக காதலித்து 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 25 வயதான புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் வசிக்கும் அப்பெண், கணவருடன் நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கணவர் கோகுல் (26) என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 30 Aug 2025 10:28 AM IST

    சென்னையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

    சென்னையில் மீனம்பாக்கம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபார முறைகேடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • 30 Aug 2025 10:09 AM IST

    அமேசான் காட்டுப் பகுதியில் பாலம் கட்ட திட்டமிட்ட அரசு; வெளியேறிய பழங்குடியின மக்கள் - வலுக்கும் கண்டனம்


    தென் அமெரிக்க நாடுகளில் அமேசான் காடுகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றன. பெருவில் உள்ள அமேசான் காடுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் வெளி உலகத்துடனான தொடர்பை தவிர்த்து வருகிறார்கள்.

    சுமார் 200 குடும்பங்கள் அளவில் வசித்து வரும் அங்கு காட்டை அழித்துவிட்டு பாலத்துடன் கூடிய பூங்கா ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் பழங்குடிகளுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும் அரசின் வாக்குறுதியை ஏற்க மறுத்த பழங்குடிகள், அவர்கள் அங்கிருந்து மேலும் அடர்ந்த காடுகளுக்கும் அருகே உள்ள காட்டில் வாழும் மற்றொரு பழங்குடியினர் வாழும் இடத்திற்கு புலம் பெயர்ந்தனர். அரசாங்கத்தின் இந்த செயலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி உலகநாடுகளிடையே கண்டனம் வலுத்து வருகிறது.


  • 30 Aug 2025 10:07 AM IST

    ராமேசுவரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


    தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக ரெயில்களில் தற்காலிகமாக அவ்வப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16618/16617) வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.


  • 30 Aug 2025 10:06 AM IST

    ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு


    பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை டோக்கியோவில், ஜப்பானின் 16 மாகாணங்களின் கவர்னர்களுடன் கலந்துரையாடினேன். இந்தியா-ஜப்பான் நட்பின் முக்கிய தூணாக மத்திய அரசு-மாகாண அரசு ஒத்துழைப்பு உள்ளது. இதனால்தான் நேற்று நடைபெற்ற 15-வது ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டின்போது இது குறித்த தனி இயக்கம் தொடங்கப்பட்டது.

    இதன் மூலம் வர்த்தகம், புதுமை, தொழில்முனைவு மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படுத்த மகத்தான வாய்ப்புகள் உருவாகும். புதிய நிறுவனங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் துறைகளும் பயன்பெறும்" என்று பதிவிட்டுள்ளார்.

  • 30 Aug 2025 10:03 AM IST

    விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடனமாடிய பாமக எம்.எல்.ஏ. - வீடியோ


    சேலத்தை அடுத்த சித்தனூரில் ஒரு நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டசபை உறுப்பினர் அருள் (பா.ம.க.) கலந்து கொண்டார். பின்னர் பனங்காடு கிராம மக்களை சந்திப்பதற்காக சேலத்தாம்பட்டி கிராமம் வழியாக சென்றார். அப்போது அந்த ஊர் மக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடந்தது.


1 More update

Next Story