தாறுமாறாக ஓடிய ஜேசிபி வாகனம் மோதியதில் இருவர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்

கோப்புப்படம்
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி வாகனம் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் தாறுமாறாக ஓடிய ஜேசிபி வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள ரெயில் நிலைய சாலையில் இருந்து ரவுண்டானா செல்லும் சாலையில் குடிபோதையில் ஒருவர் ஜேசிபி வாகனத்தை தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
இந்த நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி வாகனம் நடைபாதையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் தவெக நிர்வாகி முகமது ஷான் மற்றும் சபரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






