வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி


வேலூர்: விவசாயியிடம் ஆன்லைன் மூலம் ரூ.18.7 லட்சம் மோசடி
x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்த ஒரு விவசாயி ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவை சேர்ந்தவர் 50 வயது விவசாயி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்தார். அதில் இருந்த நபர்கள் ஆன்லைனில் முதலீடு செய்வதால் அதிக லாபம் கிடைக்கும் என்று பதிவிட்டனர்.

இதனை உண்மை என்று நம்பிய விவசாயி ஆன்லைன் கணக்கில் ரூ.20 லட்சத்து 11 ஆயிரம் முதலீடு செயதார். அதற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கமிஷனாக வந்துள்ளது. மேலும் அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது அதனை எடுக்க முடியவில்லை. விவசாயி இதுபற்றி நண்பர்களிடம் விசாரித்தபோது, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மர்ம நபர்கள் ரூ.18 லட்சத்து 71 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story