துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை


துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 28 Oct 2025 11:49 AM IST (Updated: 28 Oct 2025 1:20 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்

கோயம்புத்தூர்

இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார். இதனிடையே 2 நாட்கள் பயணமாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வந்துள்ளார். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவைக்கு வருகை தந்து உள்ளார்.

இந்நிலையில், கோவை விமான நிலையம் வந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் தொழிலதிபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் பிற்பகல் 12:15 மணிக்கு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) மதிய உணவு, ஓய்வுக்கு பின்னர் 2.30 மணி அளவில் பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு பேரூரில் இருந்து புறப்பட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story