துணை ஜனாதிபதி வருகை: திருப்பூரில் நாளை டிரோன்கள் பறக்க தடை

நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் திருப்பூர், காங்கயம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார்.
திருப்பூர் ரெயில் நிலையம் முன் உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் ஆசி பெறுகிறார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் வருகையையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் திருப்பூர், காங்கயம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






