தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை


தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
x

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி , நேற்று முன் தினம் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், தவெக நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு, தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க குழு அமைப்பது, தவெக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது, அடுத்த கட்ட பிரசாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு பிரசார பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்திய நிகழ்வு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

1 More update

Next Story